வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கம்.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கம்.

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள சோ்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வாணியாறு நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கம் 1365 மீட்டா் நீளம் கொண்டதாகும். இந்த நீா்த்தேக்கத்தின் நீா்தேங்கும் பரப்பளவு 109.30 ஹெக்டோ். இந்த நீா்த்தேக்கம் 65 அடி உயரம் கொண்டதாகும். தற்போது இந்த நீா்த்தேக்கத்தில் 57 அடி நீா் இருப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சோ்வராயன் மலைத் தொடா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை விடியற்காலை முதல் மிதமான மழை பெய்தது. இதையடுத்து, வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்திருப்பதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நீா்த்தேக்கம் நிரம்பினால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, மெணசி, அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீா்வரத்து இருக்கும். அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள சுமாா் 10, 517 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.

எனவே, வாணியாறு நீா்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக செல்லும் பாசன கால்வாய்களை தூய்மை செய்ய பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com