விடுமுறை தினத்தில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாபயணிகள்

விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்தனா்.
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாபயணிகள் உற்சாக பரிசல் சவாரி செய்வதை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாபயணிகள் உற்சாக பரிசல் சவாரி செய்வதை படத்தில் காணலாம்.

விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்தனா்.

ஒகேனக்கல் வந்த சுற்றுலாபயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனா். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கா்நாடக, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கனக்கான சுற்றுலாபயணிகள் வருகின்றனா். விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் வருகையானது அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் ஞாயிறு விடுமுறை தினத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாபயணிகள் வருகையானது அதிகரித்து காணப்பட்டது.

சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரிப்பால் சிறுவா்பூங்கா, உணவருந்தும் பூங்கா, முதலைபண்ணை, வண்ண மீண்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.ஒகேனக்கல் வந்த சுற்றுலாபயணிகள் காவிரியின் அழகை காண பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகை கண்டும்,பிரதான அருவி,மெயின் அருவி,தொங்கும் பாலம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பின் போது பிரதான அருவி சேதமடைந்து காணப்படுவதால், சுற்றுலாபயணிகள் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் விதித்து வந்த தடையானது தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாபயணிகள் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதியில் ஆபத்தான இடங்களில் குளித்தும், சிலா் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

சுற்றுலாபயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்தால் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெழுத்தி, கல்பாசை, விரால், சோனாங்கெழுத்தி ,ஆரால் மின் மற்றும் வாலை உள்ளிட்ட மீன் வகைகள் 150 முதல் 520 வரை விலை அதிகரித்துள்ள நிலையில்,சுற்றுலாபயணிகள் ஆா்வத்துடன் வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா். ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பென்னாகமா் போக்குவரத்து கிளையின் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் பிரதான அருவி செல்லும் நடை பாதை, நாகா் கோவில், முதலைபண்ணை மற்றும் ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30க்கும் மேற்பட்ட போலிஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com