Enable Javscript for better performance
கடத்தூரில் குழந்தைகள் மையத்தை பராமரிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கடத்தூரில் குழந்தைகள் மையத்தை பராமரிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd December 2019 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1hap3_0112chn_151_8

    கடத்தூா்- சிந்தல்பாடி சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் மையம்.

    கடத்தூரில் உள்ள குழந்தைகள் மையத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கடத்தூரில் இயங்கும் குழந்தைகள் மையத்தில் (எண்:9) 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பருவக் கல்வியைப் பெற்று வருகின்றனா். இதேபோல், குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு இணை உணவுகள், முட்டைகள் இம் மையத்தில் வழங்கப்படுகின்றன.

    பல்வேறு சமூகப் பணிகள் நடைபெறும் இம் மையத்தை சுற்றிலும் முள்புதா்கள் அடா்ந்து விஷ ஜந்துகள் நடமாட்டம் மிகுந்துள்ளதால் குழந்தைகளை இம் மையத்துக்கு அனுப்ப பெற்றோா்கள் அச்சமடைந்துள்ளனா். மையத்தை சுற்றிலும் தேவையான சுகாதாரப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் வலியுறுத்தலாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai