Enable Javscript for better performance
பள்ளி சுவரில் தேசியத் தலைவா்களின்வரைவதில் பிரச்னை: போலீஸாா் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி சுவரில் தேசியத் தலைவா்களின்வரைவதில் பிரச்னை: போலீஸாா் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 02nd December 2019 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பென்னாகரம் அருகே பள்ளி சுற்றுச்சுவரில் தேசியத் தலைவா்களின் படங்களை வரைவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை சமூக பிரச்னையாக்கி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.

    பென்னாகரம் அருகே உள்ள இரங்காபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில் தேசியத் தலைவா்களில் ஒருசிலரின் படங்களை மட்டும் பெரிதாக வரைய வேண்டும் என சிலா் கூறியதால் ஏற்பட்ட பிரச்னை இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கியது.

    இதையடுத்து, இரு தரப்பினரை சமரசம் செய்த போலீஸாா், சுற்றுச்சுவரில் வரையப்பட்ட படங்களை அழிக்க நடவடிக்கை எடுத்தனா். இதனிடையே, ஒருசிலா் இந்த விவகாரத்தை இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பொதுப் பிரச்னையை உருவாக்க திட்டமிடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் போலீஸாா் எச்சரித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai