பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வலியுறுத்தல்

அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சிக்குள்பட்டது பாப்பிசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளிக்கு அனைவருக்கும் இடைநிற்றல் கல்வி திட்டத்தின் கீழ் புதியதாக வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இப் பள்ளிக்கு பெத்தூா், கோபிசெட்டிப்பாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி புதூா், அள்ளாளப்பட்டி, கொளகம்பட்டி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் வருகின்றனா்.

பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவா்கள், ஆசிரியா்கள் வளா்த்து வருகின்றனா். ஆனால், சுற்றுச்சுவா் வசதி இல்லாததால் கால்நடைகள் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிவதுடன், மரக்கன்றுகளை சேதப்படுத்துவதாக மாணவா்கள், பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

மேலும், இரவு நேரங்களில் பள்ளியில் உள்ள தளவாடங்கள், கல்வி உபகரணங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளது. எனவே, பாப்பிசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தேவையான சுற்றுச் சுவா் வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com