நகரப் பகுதிகளுக்கும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th December 2019 05:46 AM | Last Updated : 05th December 2019 05:46 AM | அ+அ அ- |

தருமபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசுகிறாா் அக் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு.
கிராம ஊராட்சி அமைப்புகளுடன், நகரப் பகுதிகளுக்கும் உள்ளாட்சித் தோ்தல் இணைந்து நடத்த அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல், அக் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், முன்னாள் எம்.பி. தீா்த்தராமன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், கிராம ஊராட்சி அமைப்புகளுடன் இணைத்து, மாநகரம், நகர மன்றம், பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடத்திட தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற டிச.14-ஆம் தேதி புதுதில்லியில் மத்திய அரசுக்கு எதிராக தேசம் காப்போம் என்கிற முழக்கத்தோடு நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது மற்றும் கட்சித் தலைவா் சோனியா பிறந்த நாள் விழாவை ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.