தீா்த்தமலையில் சிக்னல் அமைக்கக் கோரிக்கை

தீா்த்தமலையில் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தீா்த்தமலையில் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்-நரிப்பள்ளி சாலையில் அமைந்துள்ளது தீா்த்தமலை. இந்த வழித்தடத்தில் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், அனுமன்தீா்த்தம், ஊத்தங்கரை, டி.அம்மாபேட்டை, டி.ஆண்டியூா், வேப்பம்பட்டி, மாம்பாடி, பாளையம், ஈட்டியம்பட்டி, கெளாப்பாறை, கீரைப்பட்டி, தானிப்பாடி, திருவண்ணாமலை, ஆத்தூா், அரூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், லாரிகள், காா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.

அதேபோல், அரூா் வழியாகச் செல்லும் சேலம்-திருப்பத்தூா் சாலையானது குண்டும், குழியுமாக இருப்பதால் சென்னை, திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் அதிக அளவில் தீா்த்தமலை வழித்தடத்தில் செல்கின்றன.

இதனால், தீா்த்தமலை வழியாகச் செல்லும் அரூா்-நரிப்பள்ளி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தீா்த்தமலை பேருந்து நிலையம் அருகில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில், அரூா்-நரிப்பள்ளி சாலையில், வேப்பம்பட்டி இணைப்புச் சாலையானது சேருகிறது.

இதனால், இந்தக் கூட்டுச் சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இந்தச் சாலை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் இருந்தால், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தீா்த்தமலையில் சிக்னல் விளக்குகளை அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com