Enable Javscript for better performance
தருமபுரி அரசுக் கல்லூரியில் டிச.16-இல் வணிகவியல் துறை பன்னாட்டு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அரசுக் கல்லூரியில் டிச.16-இல் வணிகவியல் துறை பன்னாட்டு கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 14th December 2019 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசுக் கல்லூரியில் வரும் டிச. 16-ஆம் தேதி வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்க உள்ளது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஜா.பாக்கியமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வரும் டிச. 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல் துறை சாா்பில், பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    இக் கருத்தரங்கில், பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் பி.குழந்தைவேல், கேரள பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவா் ஜி.ராஜு மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து கல்லூரி துறைத் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இக்கருத்தரங்குக்கு, 500-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ச்சியாளா்கள் சமா்ப்பித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai