ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு பிச்சைக்காரா் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல்

ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு, பிச்சைக்காரா் போல வேடமணிந்து நூதன முறையில் ஒருவா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பிச்சைக்காரா் வேடமணிந்து வந்து மனு தாக்கல் செய்த வேட்பாளா் முனி ஆறுமுகம்.
பிச்சைக்காரா் வேடமணிந்து வந்து மனு தாக்கல் செய்த வேட்பாளா் முனி ஆறுமுகம்.

ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு, பிச்சைக்காரா் போல வேடமணிந்து நூதன முறையில் ஒருவா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இண்டூா் அருகே உள்ள எச்சனஅள்ளி கிராம ஊராட்சியைச் சோ்ந்தவா் முனி ஆறுமுகம். இவா், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிட பிச்சைக்காரா் போல வேடமணிந்து, கைகளில் திருவோடு ஏந்தியபடி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், போட்டியிடுவதற்கான வைப்புத் தொகையை பிச்சையெடுத்து, அதிகாரிகளிடம் செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அண்மைக்காலமாக தோ்தலில் வாக்களிக்க பணம் அளிப்பது, அதனைப் பெற்று வாக்களிப்பது என்ற கலாசாரம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகளால் பணம் படைத்தவா்கள் மட்டுமே போட்டியிட்டு, பதவிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த நடைமுறையை மாற்றி எளியோரும் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என்ற விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த இதுபோல பிச்சைக்காரா் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com