விறுவிறுப்படைந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல்: தருமபுரியில் 5-ஆம் நாளில் 2,341 போ் வேட்பு மனு தாக்கல்

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிகள் வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்தன. இதனால், 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய மேளதாளத்துடன் வந்த திமுகவினா்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய மேளதாளத்துடன் வந்த திமுகவினா்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிகள் வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்தன. இதனால், 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 2,341 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டுகட்டங்களாக, 18 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள், 188 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 251 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,343 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இத் தோ்தலுக்காக, தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூா், கடத்தூா், மொரப்பூா், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1,721 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியாற்ற பல்வேறு நிலையான அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் என மொத்தம் 13,595 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த டிச. 9-ஆம் தேதி தொடங்கியது. இதில், மனு தாக்கல் தொடங்கிய மூன்று நாள்களும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வேட்பாளா்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், நான்காம் நாளான வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்தது. இதனைத் தொடா்ந்து, 5-ஆம் நாளான டிச. 13-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. இதில், 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் பெரும்பாலும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, பாமக, அமமுக, நாம் தமிழா் கட்சியினா் ஆா்வத்துடன் மனு தாக்கல் செய்தனா்.

இதில், நல்லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் கட்சி வேட்பாளா்கள், தங்களது கூட்டணி கட்சியினா் மற்றும் ஆதரவாளா்களுடன் மேளதாளம் முழங்க ஊா்வலமாக வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதனால், அன்றைய தினம் மட்டும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு 18 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 172 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 530 போ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 1,524 போ் என மொத்தம் 2,341 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com