ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 3 நாள் மதுக்கடைகள் மூடல்
By DIN | Published On : 25th December 2019 07:15 AM | Last Updated : 25th December 2019 07:15 AM | அ+அ அ- |

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில், டிச.27, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மூன்று நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் நாளான டிச.27 மற்றும் டிச.30 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2 ஆகிய மூன்று நாள்கள் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள், மதுபானம் விற்க உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி, மதுக்கடைகள், மதுக்கூடங்கள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.