மக்களுக்கு பலனளிக்கும் வகையில் மாநில நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும்

தமிழக மக்களுக்கு பலனளிக்கும்   வகையில் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் என்றார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்.

தமிழக மக்களுக்கு பலனளிக்கும்   வகையில் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் என்றார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்.
தருமபுரி  அருகே இண்டூரில்,  செவ்வாய்க்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசுப் பணிகளில் நூறு விழுக்காடு தமிழர்களுக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற பிப்.28-ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களில் பெரும்பகுதி வட மாநிலத்தவர்களே சேர்ந்துள்ளனர்.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழி பேசுபவர்களை பணியமர்த்தும் செயல் அரங்கேறிவருகிறது. எனவே, கர்நாடக மாநிலத்தில் உள்ளதுபோல தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்ற வேண்டும். ஏழு தமிழர்களை விடுவிக்கக் கோரி, ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத ஆளுநர், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இதில், தமிழக அரசு மீண்டும் அழுத்தம் தர வேண்டும். மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து வாக்குகளை பெறுவதற்காக மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வாக்குகளுக்காக இல்லாமல், மக்களுக்கு பலனளிக்கும்  வகையில் அமைய வேண்டும் என்றார். முன்னதாக, வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்றக் கோரும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அவர் விநியோகித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com