சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, அரூர், பாலக்கோடு ஆகிய கல்வி மாவட்டங்கள் அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோகா போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
   தருமபுரி கல்வி மாவட்ட அளவிலான யோகாப் போட்டிகள் ஒüவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. இதில், 25 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்று பல்வேறு யோகாசானங்களை செய்தனர்.
   மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சுப்பிரமணி, செந்தில்செல்வம், பழனியம்மாள், சித்ரா ஆகியோர் இப் போட்டிகளை நடத்தினர். இதில், மாணவியர் பிரிவில் மம்தா, மதுமிதா, மோனிஷா மற்றும் மாணவர் பிரிவில் லோகசந்திரன், மனோஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். இதேபோல, தருமபுரி வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செவ்வாய்க்கிழமை (பிப்.12) தருமபுரியில் நடைபெற உள்ளன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai