சுடச்சுட

  

  தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் த.காந்தி தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தார். இப் பேரணியில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி, ஜெயம் பொறியியல் கல்லூரி,  அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் பங்கேற்று, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பாதுகாப்பான சாலை பயணம் தொடர்பாகவும் பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். மேலும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.  பேரணியில் புலி வேடம் தரித்து மாணவர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  மருத்துவக் கல்லூரி முன் தொடங்கிய இப்பேரணி, நெசவாளர் காலனி, நான்கு முனைச் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், சித்த வீரப்ப தெரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று தொலைத் தொடர்பு நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில், தேசிய மாணவர் படை அலுவலர்கள்,  விஜய தேவன், முருகன் மற்றும் முருகேசன், ஆசிரியர்கள், போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai