சுடச்சுட

  

  பாலக்கோடு பேரூராட்சிப் பகுதியில் மீண்டும் நெகிழி பைகள் புழக்கத்தில் வந்துள்ளன.
  கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யவும்,  பொதுமக்கள்  பயன்படுத்தவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் பிரசாரங்களை மேற்கொண்டது. ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது வழக்கம் போல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட  அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி நெகிழிப் பைகள்  பயன்படுத்தப்படுகின்றன. 
  பேரூராட்சி அதிகாரிகள் இதுகுறித்து கண்காணித்து நெகிழிப் பைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai