தொழிற்பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

தொழிற்பள்ளிகள் தொடங்க இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கா.ரவி தெரிவித்துள்ளார்.

தொழிற்பள்ளிகள் தொடங்க இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கா.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழ் கல்வி ஆண்டுக்கு வரும் ஜூலை 1 முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், இயங்கும் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒரே தொழிற்பள்ளியால் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் அனைத்தும் நிராகரிக்கப்படும். பிப். 1-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ரூ.600, மார்ச் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ரூ.800 என ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் கட்டணமாக செலுத்த வேண்டும். புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க ஏப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அலுவலகத்தை அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com