முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
அ. பள்ளிப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி
By DIN | Published On : 28th February 2019 09:15 AM | Last Updated : 28th February 2019 09:15 AM | அ+அ அ- |

அ. பள்ளிப்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அ. பள்ளிப்பட்டியில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர்த் தேவைக்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மின் மோட்டார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வறட்சியின் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் போதிய அளவில் குடிநீர் வருவதில்லையாம். அதேபோல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் போடப்பட்டுள்ள குழாய் இணைப்புகளில் சேதம் ஏற்பட்டு இருப்பதால் கடந்த 15 தினங்களாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.
இதனால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அ.பள்ளிப்பட்டி கிராம மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.