முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
அறிவியல் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:23 AM | Last Updated : 04th January 2019 08:23 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், வியாழக்கிழமை 9-ஆவது அறிவியல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்துக்கான வேளாண் சூழல், விவசாயிகள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்னைகளைப் பற்றி விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் விவாதித்து அவற்றுக்கேற்ப வயல்வெளி ஆய்வு மற்றும் செயல்விளக்கங்களுக்கான திட்டங்களை உருவாக்க நடைபெற்ற இந்த அறிவியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் ஹெ.பிலிப் தலைமை வகித்து பேசினார்.
ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு, ஆராய்ச்சி மைய விஞ்ஞானி அ.பாஸ்கரன், தோட்டக்கலை துணை இயக்குநர் அண்ணாமலை, ஊரக வளர்ச்சி வங்கி துணை பொது மேலாளர் டி.கே.பார்த்தசாரதி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.தமிழ்செல்வன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம் ஆகியோர் பேசினர்.
இதில், நியமன உறுப்பினர்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மாவட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.