சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
  மத்தியப் பிரதேச மாநிலம்,  இந்தூர் பகுதியில் இருந்து உருளைக் கிழங்கு சுமை ஏற்றிய லாரி திருநெல்வேலி நோக்கிச் சென்றது. இந்த லாரியை சேலம் மாவட்டம்,  ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சின்ராஜ் (28) ஓட்டிச் சென்றார். 
  தருமபுரி மாவட்டம்,  தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலைக் கடந்து வளைவில் லாரி சென்ற போது,  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  தகவல் அறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் குறிஞ்சி நகர் சுங்கச் சாவடி ஊழியர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
  இந்த விபத்தில், லாரியின் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் சின்ராஜ் மற்றும் சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொம்பரகாம்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி கந்தசாமி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும்,  விபத்தில் காயமடைந்த ராஜா, கன்னி ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.  
  விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai