சுடச்சுட

  

  பாப்பாரப்பட்டியில்  உள்ள பரம்வீர்  மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
  இதில் சிறப்பு விருந்தினராக  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். பரம்வீர் குழுமத்தின் தலைவர் செல்வி ஸ்ரீதரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் .
  விழாவுக்கு தலைமை வகித்து மயில்சாமி அண்ணாதுரை பேசியது: எனது சிறுவயதில் நான் கற்றுக்கொண்ட சிக்கனப் பழக்கமே, மிகக் குறைந்த செலவில்  திட்டமிட்டு விண்வெளிக்கு சந்திரயானை அனுப்ப உதவியது. எக்காரணத்தைக் கொண்டும் நமது நாட்டின் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். எல்லா வளமும் நமது நாட்டில் உள்ளன. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். எந்த பலத்தை விடவும் மனோபலம் மிகவும் அவசியம். 
  அந்த மனோபலத்துடன் மனம் ஊன்றி செய்தால் எச்செயலிலும் வெற்றிபெறலாம். அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கை முறையை கொடுக்க வேண்டிய  பொறுப்பு நமக்கு உள்ளது என்றார். இதில், பரம்வீர் குழுமத்தின் நிறுவனர் கணேஷ் ஸ்ரீதரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai