அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா

அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பைநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ச.வைதேகி தலைமை வகித்தார். இதில், மாணவ, மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சு, ஓவியம், கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 
இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து ஆசிரியர்கள்  கருத்துரைகள் வழங்கினர். இதில், பள்ளி ஆசிரியர்கள் கோ.சரஸ்வதி, ந.பாபுகுமார், மொ.ரஹிதா, ச.கவிதா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஒசூரில்... ஒசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி ஆரம்பப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராகினி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு விளையாட்டு, ஓவியம்,  கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் மலர்விழி, நித்யா, உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, மாணவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். விசாலாட்சியம்மாள் நினைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கிப் பயிலும் 40 மாணவர்களுக்கு போர்வை, இனிப்புகளை முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.பூபதி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com