சுடச்சுட

  


  கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வேடியப்பன் தலைமை வகித்தார். விழாவில் உறி அடித்தல், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
  சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர் வே.தமிழ்மணி, பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம், பள்ளியின் கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ், சிதம்பரம், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  தீரன்சின்னமலை பள்ளியில்... ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் அறிவியல், கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன், ஊத்தங்கரை மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பரிமளம் மற்றும் உப்பாரப்பட்டி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த அறிவியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
  பள்ளியின் செயலாளர் தங்கராஜ், தாளாளர் பிரசன்னமூர்த்தி, பள்ளியின் முதல்வர் ஜோஸ்பின், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  மாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்... அரூரை அடுத்த மாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி.சேகர் தலைமை வகித்தார். மாணவ, மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சு, ஓவியம், கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 
  போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்க பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து ஆசிரியர்கள் கருத்துரைகளை வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai