சுடச்சுட

  


  சபரிமலை விவகாரத்தில் இந்து அமைப்புகளின் நடவடிக்கைகள் கண்டித்து, தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.குமார் தலைமை வகித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, சி.நாகராஜன், கிரைஸாமேரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
  சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்து அமைப்புகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், பெண்கள் வழிபாட்டு உரிமைகளில் தலையிடும் இந்து அமைப்பை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai