பொங்கல் விழா  உற்சாகக் கொண்டாட்டம்

தருமபுரியில் பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தருமபுரியில் பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டு பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டது. நகரப் பகுதியில் அந்தந்த குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பிலும், கிராமங்களில் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கொண்டாடினர்.
இதில், பெண்கள், குழந்தைகளுக்கு கோலப் போட்டிகள், இசை நாற்காலி, நடனம் உள்ளிட்ட போட்டிகளும், இளைஞர்களுக்கு உறியடி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.
இப் போட்டிகளில் வென்றவர்களுக்கு விழாக் குழுக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல, பிற்பகலில் தங்களது கால்நடைகளை அலங்கரித்து கோயில்கள் முன் நிற்க வைத்து சிறப்பு வழிபாட்டில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
மேலும், பல்வேறு கிராமங்களில் மறைந்த முன்னோர் நினைவாக, நோன்பு இருந்து வழிபட்டனர்.
காவல்துறையின் பொங்கல் விழா: காவல்துறை சார்பில், தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல் குடியிருப்பு வளாகத்தில் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், காவலர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில், வென்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. மகேஷ்குமார் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். விழாவில், உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, துணை காவல் கண்காணிப்பாளர் த. காந்தி மற்றும் காவல் ஆய்வாளர்கள் ரத்தினகுமார், ஸ்ரீதர் (தனிப்பிரிவு), காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com