எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்

அதிமுக, அமமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அதிமுக, அமமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், நகரச் செயலர் குருநாதன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல, தருமபுரி பாரதிபுரம் அரசு  போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பழைய தருமபுரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், நகரச் செயலர் எம்.ஜி.மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தாளப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றிய செயலர் சோக்காடி ராஜன் தலைமை வகித்தார். அங்குள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு அதிமுக மாவட்டச் செயலர் கே.அசோக்குமார் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்வில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி நகர் செயலர் பி.என்.ஏ.கேசவன், கிருஷ்ணகிரி நகர முன்னாள் தலைவர் தங்கமுத்து, தாபா வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
காவேரிப்பட்டணத்தில் நகரச் செயலர் வாசுதேவன் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் துணைத் தலைவர் குப்புசாமி, கட்சி நிர்வாகி கே.பி.எம். சதிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலிருந்து, வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை வரையில், அதிமுகவினர் ஊர்வலம் சென்றனர்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர். திரு உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.பி.ரவி, பென்னாகரம் நகர செயலர் சுப்பிரமணி, பாப்பாரப்பட்டி முன்னாள் பேருராட்சித் தலைவர் ராஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாப்பாரப்பட்டியில் பென்னாகரம் ஒன்றியச் செயலர் வேலுமணி தலைமை தாங்கினார். பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து இண்டூர் செல்லும் பிரிவு சாலை வரை ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
போச்சம்பள்ளியில்...
மத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை தாங்கி சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் தலைவர் பியாரேஜான், ஒன்றிய மாணவர் அணி ஒன்றிய செயலர் சக்தி, குன்னத்தூர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com