ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை தொலைத்தொடர்பு நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரியில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை தொலைத்தொடர்பு நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் பி.எம்.கெளரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ம.சுருளிநாதன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் பொன்.ரத்தினம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிதாக தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதற்கு எதிராகவும், சத்துணவு மையங்களை மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன், அப்பாசாமி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டாக தலைமை வகித்தனர். ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com