தருமபுரியில் ஜன. 21 முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சேர்க்கை

தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில், வரும் ஜன. 21-ஆம் தேதி முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில், வரும் ஜன. 21-ஆம் தேதி முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 
தருமபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் குமாரசாமிபேட்டை, 4-ஆவது வார்டு சாலை விநாயகர் கோயில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் என 9 மையங்கள், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஆகிய 10 மையங்கள், பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி, நாகனூர், வெள்ளமண்காடு ஆகிய 14 மையங்கள், பாலக்கோடு ஒன்றியத்தில் சீங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஆகிய 4 மையங்கள், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகனம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி என 11 மையங்கள், மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும் ராணிமூக்கனூர் உள்ளிட்ட 10 மையங்கள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிபட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி மற்றும் அச்சல்வாடி ஆகிய 12 மையங்கள், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு 2 என மையங்கள் என மொத்தம் மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில் ஜன. 21 முதல் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் சேர்த்து பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com