ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, ஆதரவற்றோருக்கு


ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, ஆதரவற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி விழா என முப்பெரும் விழாநடைபெற்றது.
நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பூஜ்யஸ்ரீ தியாகராஜானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைத்து மாணவிகளும் விவேகானந்தரின் அறிவுரைகளை உறுதிமொழியாக ஏற்றனர். பின்னர், சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
நேசம் தொண்டு நிறுவனம், சீனிவாசா கல்வி அறக்கட்டளை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் ஆதரவற்ற முதியோர் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கிராமியக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், உரி அடித்தல் மற்றும் புதையல் தேடும் போட்டி,களி மண்ணால் உருவம் செய்தல், ஆடை அலங்காரப் போட்டி, பாட்டு மன்றம், நாடகம், கோலப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், செயலர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், முதல்வர் முனைவர் தா.இரா.கணேசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரிச் செயலாளர்
பரிசுகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com