பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வலியுறுத்தல்

பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, கண்ணியமான பணியை உறுதி செய்ய வேண்டும் என


பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, கண்ணியமான பணியை உறுதி செய்ய வேண்டும் என உழைக்கு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.தெய்வானை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை உள்ளிட்டோர் பேசினர்.
இக் கூட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் கண்ணியமான பணியை உறுதிப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேர பணி, ஆபத்தான பணியின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 
பெண் தொழிலாளர்கள் பணியிடங்களில் பாலியல் புகார் பெட்டி, தனி கழிப்பறை, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com