சுடச்சுட

  

  தருமபுரியில் ஜூலை 6-இல்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில்  வருகிற ஜூலை 6 - ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி  திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி  மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  ஜூலை 6-ஆம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
  இம்முகாமில் 5 - ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2  வரையிலான பள்ளிக் கல்வி முடித்தோர், பட்டயம்,  தொழிற்கல்வி,  பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவம் சார்ந்த  படிப்புகள் (செவிலிய உதவியாளர், மருந்தாளுநர்),  தையல்பயிற்சி உள்பட்ட பல்வேறு திறன் பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். தருமபுரி,  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஒசூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai