சுடச்சுட

  

  சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக் கோரி,  மோட்டார் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
  ஆர்ப்பாட்டத்துக்கு  கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். சிஐடியு  ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சி.முரளி,  சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலர் சி.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
  இந்த  ஆர்ப்பாட்டத்தில்,  சாலை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும்  நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல்,  டீசல், எரிவாயு ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும். காலவரம்பு நிறைவுற்ற சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்தம் செய்ய வேண்டும். காப்பீட்டில் நிகழும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai