தருமபுரியில் ஜூலை 13-இல் மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில், வருகிற ஜூலை 13 - ஆம் தேதி மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், வருகிற ஜூலை 13 - ஆம் தேதி மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து,  தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுத்  தலைவர் ஏ.கந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில்,  தருமபுரி  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,  பாலக்கோடு மற்றும் பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழுக்கள் மூலம் அந்தந்த நீதிமன்றங்களில் வருகிற ஜூலை 13-ஆம் தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில், மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும். இதில் சாலை விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீர் வரி, காசோலை வழக்குகள், மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜிதம் வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வழக்குகளில் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள மக்கள் நீதிமன்றம் வாய்ப்பு அளிக்கிறது. நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் தவிர, புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்.
மக்கள் நீதிமன்றங்கள், இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற பிரச்னைகளில் இரு தரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்க வழிவகை செய்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சம்பந்தமாக வழக்காடுபவர்களோ அவர்கள் சார்பில் வழக்குரைஞர்களோ தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்து தங்கள் வழக்குகளை விரைந்து தீர்வு காணலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com