சுடச்சுட

  

  அஞ்சல் காப்பீடுத் திட்ட முகவர்களைத் தேர்வு செய்ய ஜூலை 12-ஆம் தேதி தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. 
  இது குறித்து, தருமபுரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் புதிய பாலிசிகள் சேமிப்பதற்கு நிகழ் நிதியாண்டில் தருமபுரி அஞ்சல்  கோட்டத்துக்குப் புதிதாக காப்பீட்டு முகவர்கள் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தருமபுரி அஞ்சல்  கோட்டத்தில் வரும் ஜூலை 12 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நேர்காணல் நடைபெற உள்ளது.
  ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதார் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 60 வரை வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். விவரங்களுக்கு 04342-260932  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai