சுடச்சுட

  

  தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருள்மிகு பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) திருக்கல்யாண உத்ஸவ பெருவிழா நடைபெற உள்ளது.
  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோயிலில் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.
  விழாவில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை, கலசாபிஷேகம் நடைபெறும்.
  அதேபோல மாலை 6 மணிக்கு, அருளீஸ்வரருக்கு திருக்கல்யாண உத்ஸவ பெருவிழா நடைபெறும். இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். திருக்கல்யாண உத்ஸவத்துக்கு பக்தர்கள், மஞ்சள், குங்குமம், தேங்காய், மலர்மாலை, வேட்டி, துண்டு, புடவை, தாலிக் கயிறு ஆகியவைக் கொண்டு வரலாம் என விழாக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai