தகடூர் புத்தகத் திருவிழா போட்டிகளுக்கான தேதி நீட்டிப்பு

தகடூர் புத்தகத் திருவிழா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்புவதற்கான

தகடூர் புத்தகத் திருவிழா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம் ஜூலை 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தகடூர் புத்தகப் பேரவை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரியில் 2-ஆம் ஆண்டு "தருமபுரி புத்தகத் திருவிழா'  வருகிற ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தருமபுரி பாரதிபுரம் மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசு, சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி "நான் ஆணையிட்டால்' (தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்), 
கட்டுரைப் போட்டி "என்னைக் கவர்ந்த புத்தகம்', கவிதைப்போட்டி "கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற தலைப்பிலும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டி "மகாத்மா காந்தி-150', கவிதைப் போட்டி "வானமே எல்லை' என்கிற தலைப்பிலும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி "நான் கண்ட தருமபுரி புத்தகத் திருவிழா' (புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் ), 1-5 மற்றும் 6-10 வகுப்புகளுக்கு ஓவியப்போட்டி "புவியைக் காப்போம்' என்கிற தலைப்பிலும் நடைபெறும்.
இப் போட்டிகளுக்கான படைப்புகளை அனுப்ப தற்போது ஜூலை 18-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கவிதை 15 வரிகளுக்குள்ளும், கட்டுரைகள் மூன்று பக்கங்களுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு படைப்பு மட்டும் அனுப்ப வேண்டும். படைப்புகளை, பள்ளி மாணவர்கள், தருமபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவியர், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும். 
தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இப் போட்டிகளில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com