Enable Javscript for better performance
இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     அரூர் வட்ட சட்டப் பணிகள் குழு, மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், அரூர் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் இ.ராஜேந்திர கண்ணன் தலைமை வகித்தார்.
     முகாமில், மகளிருக்கான சட்ட பாதுகாப்புகள், சட்ட உதவிகள், பெண் கல்வி, இளம் வயது திருமணங்களை தடுத்தல், பெண் சிசு கொலைகளைக் கட்டுப்படுத்துதல், மகளிருக்கான உரிமைகள், வாகனம் ஓட்டுவோர் தலைக் கவசம் அணிந்து செல்வதின் அவசியம், விபத்தில் பாதிக்கப்படுவோருக்கான காப்பீடு வசதிகள், கல்லூரிகளில் நடைபெறும் கேலி, கிண்டல்களைத் தடுப்பது குறித்து நீதிபதி இ. ராஜேந்திர கண்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. விஸ்வநாதன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
     இதில், மொரப்பூர் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி. முத்து, செயலர் பொ. காந்தி, பொருளாளர் தி. அன்பு, தாளாளர்கள் செ. தீர்த்தகிரி, தீ. சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் நா. குணசேகரன், துணை முதல்வர் க.சீனிவாசன், வழக்குரைஞர்கள் சி.முருகன், சி.சிற்றரசு, நிர்வாக இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai