Enable Javscript for better performance
கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூரில் கழிவு நீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     மொரப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
     இந்தப் பகுதியில் போதிய அளவில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால், மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் கழிவு நீரானது குடியிருப்புப் பகுதியில் தேங்கும் நிலையுள்ளது.
     கழிவுநீர்த் தேங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
     எனவே, மொரப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai