Enable Javscript for better performance
சுவாமி விவேகானந்தர் ரதம் நாளை பாலக்கோடு வருகை- Dinamani

சுடச்சுட

    

    சுவாமி விவேகானந்தர் ரதம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) பாலக்கோடு பகுதிக்கு வருகை தர உள்ளது.
     சேலம் ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் சுவாமி விவேகானந்தர் ரதம் பல்வேறு இடங்களுக்கு யாத்திரையாக செல்கிறது. இந்த ரதம், கடந்த 21-ஆம் தேதி சேலத்திலிருந்து தருமபுரி வந்தடைந்தது.
     அப்போது, மாவட்ட எல்லையான தொப்பூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரி, அதகப்பாடி, இண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இந்த ரதம் பவனி வந்தது.
     இதையடுத்து, ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாள்கள் பாலக்கோடு பகுதிக்கு சுவாமி விவேகானந்தர் ரதம் வருகை தர உள்ளது.
     முதல் நாளான 26-ஆம் தேதி, பாலக்கோடு, கடைமடை ஆஞ்சநேயர் கோயில் அருகே ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, 27-ஆம் தேதி சுவாமி தயானந்த வித்யாஷ்ரமம் பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல, பாலக்கோடு தக்காளி சந்தை வளாகம் அருகிலிருந்து ஐயப்பன் சேவா சங்கம் வரை ஊர்வலம் நடைபெற உள்ளது.
     இதில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை, பாலக்கோடு பகுதி பக்தர்கள் மற்றும் ரத வரவேற்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai