Enable Javscript for better performance
ஜூலை 27-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை 27-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

    By  தருமபுரி / கிருஷ்ணகிரி,  |   Published on : 25th July 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திப்பம்பட்டி கூட்டுச் சாலை பகுதியில் ஜூலை 27-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
     இது குறித்து மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள காலணி தயாரிக்கும் நிறுவனம் தங்களது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிளைக்கு தேவையான ஆள்களை, மொரப்பூர், காரிமங்கலம், வன்னியகுளம், அரியகுளம், நாயக்கன்கொட்டாய், ஏர்ரசிகரஅள்ளி, கும்பாரஅள்ளி, இண்டமங்கலம், பாப்பாரப்பட்டி, திண்டல், கொல்லப்பட்டி, இருமத்தூர், வகுரப்பம்பட்டி, திப்பம்பட்டி, வகுத்துப்பட்டி, கம்பைநல்லூர், நவலை, ஈச்சம்பாடி, கெலவள்ளி, கெரகோடஅள்ளி, கொங்காரப்பட்டி, பந்தாரஅள்ளி ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்ய உள்ளனர்.
     எனவே, இக் கிராமங்களில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் உரிய சான்றிதழ்களுடன் திப்பம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
     கிருஷ்ணகிரியில்...
     கிருஷ்ணகிரியில் ஜூலை 27-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
     இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து, கிருஷ்ணகிரி அரசு மகளில் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதில் கிருஷ்ணகிரி, ஒசூர், சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாள்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
     10-ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி பெற்றவர்கள், 10, 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் பங்கேற்க தகுதியுடையவர்கள். பணி நாடுநர்கள், தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai