Enable Javscript for better performance
தினமணி சார்பில் தருமபுரியில் நாளை டேக்வாண்டோ மாநில சாம்பியன்ஷிப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தினமணி சார்பில் தருமபுரியில் நாளை டேக்வாண்டோ மாநில சாம்பியன்ஷிப் போட்டி

    By DIN  |   Published on : 25th July 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினமணி நாளிதழ் சார்பில் தருமபுரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) 32-ஆவது மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கவுள்ளன. இந்தப் போட்டிகள் 3 நாள்கள் நடைபெறுகின்றன.
     தினமணி நாளிதழ் மற்றும் தருமபுரி டேக்வாண்டோ சங்கம் சார்பில் தருமபுரி-பாலக்கோடு சாலையில் உள்ள கமலம் இண்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான மூன்று டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
     ஜூலை 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இப் போட்டிகளில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட 32 மாவட்டங்களில் இருந்து சுமார் 1200 பேர் பங்கேற்க உள்ளனர். இதில், 8 முதல் 12 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 700 மாணவர்களும், 12 முதல் 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 500 மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
     சப்-ஜூனியர், கேடட் மற்றும் சூரிகி-பூம்சே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இப் போட்டிகளை தினமணி நாளிதழுடன், சேலம் சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி, சேலம் விநாயகா மிஷன், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி கல்வி நிறுவனங்கள், தருமபுரி மாவட்டம், அரூர் உதவும் குடிமக்கள் அமைப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி மக்கள் மன்றம், கோயம்புத்தூர் ஸ்ரீவத்சன் போட்டோகிராபி ஆகியவை இணைந்து ஒருங்கிணைக்கின்றன.
     முதல் நாள் ஜூலை 26-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கி வைக்கின்றனர். இதில், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி, ' வீரமும், விவேகமும்" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, 27, 28-ஆம் தேதிகளில் போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai