Enable Javscript for better performance
நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தகடூர் புத்தகப் பேரவையின் இரண்டாவது புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளது.
     தகடூர் புத்தகப் பேரவை சார்பில் பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில், இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. பாரதி புத்தகாலயம் உள்பட பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் சார்பில் இத் திருவிழாவில் 50 புத்தக அரங்குகள் அமைப்படவுள்ளன. வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 11 மணிக்கு நடைபெற உள்ள தொடக்க விழாவுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகிக்கிறார். மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து, விழா மலரை வெளியிட்டு உரையாற்றுகிறார். இதில், மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன், "காகிதப் புரட்சி' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இதேபோல, புத்தகத் திருவிழா நடைபெற உள்ள 10 நாள்களும் நூல்கள் வெளியீடு, ஆளுமைகளின் உரை நிகழ்வு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai