Enable Javscript for better performance
நீர் மேலாண்மை பணிகள்: 2-ஆவது நாளாக மத்தியக் குழுவினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நீர் மேலாண்மை பணிகள்: 2-ஆவது நாளாக மத்தியக் குழுவினர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளை இரண்டாவது நாளாக மத்தியக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
     மத்திய இளைஞர் விவகாரங்கள் அமைச்சக, இணைச் செயலரும், மத்தியக்குழுத் தலைவருமான இந்தர் தமீஜா தலைமையில் நீர்மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு இயக்கத் திட்டத்தின் மத்திய குழுவினர், தருமபுரி அருகே புலிக்கரை ஏரி மற்றும் பொம்மஹள்ளி ஏரிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏமகுட்டியூரில் சனத்குமார் நதி ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
     இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, அனைத்துத் துறை அலுவலர்கள், பொறியாளர்கள் கூட்டத்தில் மத்தியக் குழுத் தலைவர் இந்தர் தமீஜா பேசியது:
     நீர் மேலாண் இயக்கத்தில் மேற்கொள்ளவிருக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும், இலக்குகள் நிர்ணயித்து, பணிகளை விரைந்து முடித்து, நிலத்தடி நீர் மட்ட அளவினை உயர்த்த தேவையான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், முன்மொழியப்பட்ட ஒவ்வொரு பணிகளுக்கும் தொடர் கண்காணிப்புகள் மேற்கொண்டு, நிலத்தடி நீர் மட்ட அளவு, ஈரப்பத அளவு ஆகியவற்றின் சதவீத வாரியான உயர்வை மேம்படுத்த வேண்டும் என்றார்.
     கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக துணைச் செயலர் சரங்கதர் நாயக், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் துணைச் செயலர் எஸ்.கே.பரிடா, நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி துறை தொழில்நுட்ப அலுவலர்கள் எம்.கே.ஜோஸ், ஆர்.ஆறுமுகம், எஸ்.கே.சுக்லா, விஞ்ஞானிகள் ஜோசப், எஸ்.கே.விஜயகுமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மா.காளிதாசன், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai