Enable Javscript for better performance
வனப்பகுதியில் விலங்குகளுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த பாஜக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வனப்பகுதியில் விலங்குகளுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த பாஜக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வனப் பகுதியில் வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
     அரூரில் பாஜக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம், ஒன்றியத் தலைவர் கே. வெங்கடாசலம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
     அரூர், சித்தேரி, கோட்டப்பட்டி, மஞ்சவாடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மலைத் தொடர்களில் மான்கள், காட்டெருமைகள், பன்றிகள், முயல்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
     தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் சிறிதளவும் தண்ணீர் இல்லை. இதனால், வன விலங்குகள் குடிநீருக்காக விவசாய நிலங்களுக்கு வரும் நிலையுள்ளது.
     எனவே, வனத்துறை சார்பில் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும், தூர்வார வேண்டும்.
     நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழை நீர் சேமிப்புகளைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
     கிராமச் சாலைகள் திட்டம், வங்கிகளில் முத்ரா கடன் திட்டம், நீர் மேலாண்மைத் திட்டங்கள், மத்திய அரசின் இலவசத் தொகுப்பு வீடுகள், தனி நபர் கழிப்பிடம் உள்ளிட்ட மத்திய அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாகச் சென்றடைகிறதா? என்பது குறித்து பாஜக நிர்வாகிகள் அனைவரும் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     இதில், பாஜக மாவட்டத் தலைவர் வரதராஜன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், மாநிலச் செயலர் நந்தகுமார், ஒன்றியச் செயலர் சி. பாலாஜி, கட்சி நிர்வாகிகள் அழகு, கணேசன், கிருத்திகா, தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai