"நிகழாண்டில் 1.15 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு'

நிகழாண்டில், 1.15 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்தார்.

நிகழாண்டில், 1.15 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2018-19-ஆம் ஆண்டு அரைவைப் பருவம் கடந்த 2018 டிச. 13-இல் தொடங்கி 2019 மார்ச் 27-இல் முடிவுற்றது. இது தொடர்பான விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், நிகழாண்டு கரும்பு அறுவடை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆலை மேலாண் இயக்குநர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மேலாண் இயக்குநர் பேசியது: சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த அரைவைப் பருவத்தில் 2,26,121 மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டது. இதில், 2,40,070 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. சர்க்கரை உற்பத்தியில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 10.61 சதவீதம் எய்தி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. அரைவைப் பணியின் போது, ஆலைக்கு கரும்பை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 256 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், கரும்பு வெட்டும் பணியில் 186 வெட்டுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆலை அரைவை சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த ஆலையின் விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், வாகன ஒட்டுநர்கள், வெட்டுக் குழுக்கள், கரும்பு அலுவலர்கள், கரும்பு களப் பணியாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல, நிகழாண்டு (2019-20) அரைவைப் பருவத்துக்கான நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 1.15 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கரும்பு வெட்டும் பணிகளுக்கான வேலையாள்கள் தட்டுப்பாடு நிலவுவதால், கரும்பு வெட்டும் இயந்திரம், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், உழவுக் கருவிகள், களை எடுக்கும் கருவிகள் மற்றும் கரும்பு சோகையை தூளாக்கும் இயந்திரம் உள்ளிட்ட விவசாயக் கருவிகள் ஆலையின் அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அக்கருவிகளை நல்ல முறையில் விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com