விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 12th June 2019 09:30 AM | Last Updated : 12th June 2019 09:30 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த செக்காம்பட்டியில் விவசாயி வீட்டில் நகை, பணம் செவ்வாய்க்கிழமை திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அரூர் வட்டம், செக்காம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தரேசன் (55). இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ஒருபவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சுந்தரேசன் (55) அளித்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.