சுடச்சுட

  

  அரூரை அடுத்த கைலாயபுரத்தில் ஜூன் 16-ஆம் தேதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. 
  சேலம் ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருப்பணிக் குழுவினர், பங்குனி உத்திர அன்னதான இலவச கண் சிகிச்சை முகாம் குழுவினர், சேலம் நாகம்மாள் கிருஷ்ணராவ் தர்ம டிரஸ்ட், தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனைஇணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்துகின்றனர்.
  ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறுகிறது. பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் உள்ளிட்ட கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
  முகாமில் பங்கேற்க வரும் அனைவரும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகலை எடுத்து வர வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai