சுடச்சுட

  

  சின்னாங்குப்பத்தில் உள்ள தடுப்பணையைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
  அரூர் ஊராட்சி ஒன்றியம், சின்னாங்குப்பம் கிராமம் அருகில் கல்லாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் வழியாக செல்லும் கால்வாயினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. இந்த நிலையில், இங்குள்ள தடுப்பணையில் முள்புதர்கள் மற்றும் தூர் அடைந்துள்ளது. இதனால், தடுப்பணையில் நீர்பிடிப்பு கொள்ளளவு குறைந்து வருகிறது. மழைக் காலங்களில் இந்தத் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால், சின்னாங்குப்பம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், குடிநீர் பிரச்னைகள் தீரும். எனவே, சின்னாங்குப்பம் கல்லாற்றினை தூர்வார மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai