சுடச்சுட

  

  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் சேதமடைந்த சாலையோர தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் சிறுபாலம் உள்ளது. இந்த சிறுபாலத்தில் தடுப்புச் சுவர் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்துச் செல்கின்றன. சாலையோர தடுப்புச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது, பள்ளமான பகுதியில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து நேரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சாமியாபுரம் கூட்டுச் சாலையில் உள்ள சிறுபாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai