சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
  தருமபுரி மாவட்டத்தில், உரிமமின்றி வைத்துள்ள நாட்டுத் துப்பாக்கிகளின் பயன்பாட்டைத் தடுக்க, மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த மூன்று நாள்களாக மலைக் கிராமங்களில் தண்டோரா மூலம் போலீஸார், உரிமம் இன்றி வைத்துள்ள நாட்டுத் துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலோ ஒப்படைக்கலாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
  இதனைத் தொடர்ந்து, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில், உரிமமின்றி வைத்திருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல, அண்மையில் தருமபுரி அருகே வெள்ளோலை வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai