சுடச்சுட

  

   

  தருமபுரி: பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வது குறித்து உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள பெல்ரம்பட்டியில் நடைபெற்ற இப்பயிற்சியில், மருத்துவ அலுவலர் எம்.சிவகுரு தலைமை வகித்து பேசினார். இதில், ஊராட்சி செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள் தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வது மற்றும் சுகாதாரம் பேணி காப்பது, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில், சுகாதார மேற்பார்வையாளர் ஏ.சேகர், சுகாதார ஆய்வாளர் தமிழ் செல்வம், கிராம சுகாதார செவிலியர்கள் ஜெயந்தி, கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai